ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாதசுவாமி கோவில் தேரோட்டம்


ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாதசுவாமி கோவில் தேரோட்டம்
x

ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாதசுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். கடந்த 3-ந் தேதியன்று கொடியேற்றுத்துடன் திருவிழா தொடங்கியது.

தினமும் வைத்தியநாத சுவாமி மற்றும் சிவகாமி அம்பாள் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கடந்த 10-ந்தேதி அன்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு வைத்தியநாதசுவாமி மற்றும் சிவகாமி அம்பாள் தேரில் எழுந்தருளினர். அதன்பின்னர் பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். 4 ரதவீதிகளிலும் பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேர் ஆடி அசைந்து வந்தது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ஜவஹர் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story