டாஸ்மாக் கடையின் சுவரில் துளை போட்டு ரூ.18 ஆயிரம் மதுபாட்டில்கள் திருட்டு


டாஸ்மாக் கடையின் சுவரில் துளை போட்டு ரூ.18 ஆயிரம் மதுபாட்டில்கள் திருட்டு
x

தூசி அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளை போட்டு ரூ.18 ஆயிரம் மதுபாட்டில்கள் திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை

தூசி

வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே அப்துல்லாபுரம் கிராமத்தில் காஞ்சீபுரம் -வந்தவாசி சாலையில் சோதனை சாவடி அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு ேமற்பார்வையாளராக செய்யாறை சேர்ந்த சதாசிவம், விற்பனையாளராக பழனி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு 10 மணி அளவில் கடையை பூட்டி விட்டு சென்றனர்.

இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் கடையில் பின்பக்க சுவற்றில் துளை போட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே பழனிக்கும், சதாசிவத்துக்கும் தகவல் தெரிவித்தனர். இருவரும் அங்கு வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் பின்பக்க சுவரை துளைபோட்டு உள்ளே நுழைந்து ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை எடுத்து சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து தூசி போலீசில் சதாசிவம் புகார் அளித்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்

. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story