ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு
நம்பியூர்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில மைய முடிவின்படி நம்ம ஊரு சூப்பர் என்ற திட்ட செயல்பாடுகளின் நெருக்கடி, விடுமுறை நாட்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதை கைவிடுதல், கிராம ஊராட்சி கணக்கு எண் ஒன்றில் போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நம்பியூர் வட்டார தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று மாலை 5 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு நம்பியூர் வட்டார தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story