நாட்டறம்பள்ளி பகுதியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்


நாட்டறம்பள்ளி பகுதியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
x

நாட்டறம்பள்ளி பகுதியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியில் வரும் கல்வியாண்டில் 2022-2023ம் ஆண்டுக்கான தீவிர மாணவர் சேர்க்கை நடப்பதையொட்டி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. விழிப்புணர்வு ஊர்வலம் நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே தொடங்கி பஸ் நிலையம் வரை நடந்தது.

விழிப்புணர்வு ஊர்வலத்துக்கு நாட்டறம்பள்ளி வட்டாரக் கல்வி அலுவலர்கள் கோமதி, நானாகிரிஜா ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். அதில், மாணவர்கள் வரும் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை குறித்தும் அரசு பள்ளிகளில் உள்ள வசதிகள் மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள சிறப்பு அம்சங்கள், கற்றல் முறை ஆகியவற்றை தெரிவிக்கும் வகையில் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

ஊர்வலத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மங்கையர்கரசி மற்றும் உதவி ஆசிரியர்கள், கிராம கல்விக்குழு, பள்ளி மேலாண்மைக் குழு பிரதிநிதிகள் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story