மாணவர் பெருமன்ற கூட்டம்

திருப்பத்தூரில் மாணவர் பெருமன்ற கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட அனைத்திந்திய மாணவர் பெருமன்ற கூட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வை.சுவேதா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாணவர் பெருமன்ற மாநில செயலாளர் பாரதி, கலந்துகொண்டு பேசினார். கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் எம்.சுந்தரேசன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஏ.சி.சாமிக்கண்ணு, ஒன்றிய செயலாளர் குமார் உள்பட பலர் பேசினார்கள்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் அண்ணாமலை, பூபதி, வேணுகோபால், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் வெங்கடேசன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் சாதி, மதம், இனம், மொழி, ஒழிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும், அரசு பள்ளிகளில் அனைத்து விதமான அடிப்படை வசதிகளை வழங்கப்பட வேண்டும், கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஏற்ப தரமான வகுப்பறை கட்டப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற திருப்பத்தூர் மாவட்ட தலைவராக வி. தர்ஷினி, செயலாளராக எம்.கவின் பொருளாளராக முகேஷ் குமார் உள்பட பல்வேறு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.