கல்லூரி முன்பு மாணவர்கள் தர்ணா போராட்டம்

ஆம்பூரில் கல்லூரி முன்பு மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்
ஆம்பூர் டவுன் ரெட்டித்தோப்பு பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 120 மாணவர்கள் பி.காம் தேர்வு எழுதினர். அதில் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கல்லூரி நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்லூரி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கல்லூரி நிர்வாகத்தினரிடம் இதுகுறித்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story