51 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு


51 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு
x

திருப்பத்தூர் ராமகிருஷ்ணா பள்ளியில் 51 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் ெரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள அரசு நிதி உதவி பெறும் ராமகிருஷ்ணா மேல்நிலைபள்ளியில் 1972-73-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்கள் 51 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து கலந்துரையாடல் மற்றும் படித்த ஆசிரியர்களிடம் ஆசி பெரும் நிகழ்ச்சி திருப்பத்தூர் ெரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள எஸ்.ஆர்.கே. கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு 1072-73-ம் ஆண்டு பள்ளி மாணவர்கள் டி.சுசிகார், தேசிங்குராஜன் தலைமை வகித்து அனைவரையும் வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சி.ஆர்.ஜெயகோபால், சேகர், வெங்கடேசன், எத்திராஜ் ஆகியோரிடம் பழைய மாணவர்கள் ஆசி பெற்று, பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள். பள்ளி மாணவர்கள் தருமன், கிருஷ்ணன், வெங்கட்ராமன், செல்வகுமார், விஜயகுமார், உள்ளிட்ட பலர் பழைய ஆசிரியர்களின் கற்றல் தன்மை மற்றும் மாணவர்களை நினைவு கூர்ந்து பேசினார்கள்.

பழைய பள்ளி மாணவர்கள் நினைவாக மரக்கன்றுகளை நட்டனர். பின்னர் மாணவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வெளிநாட்டில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பல்வேறு பதவிகளில் இருக்கும் பழைய மாணவர்கள் கலந்து கொண்னர். 1972-73 வாட்ஸ் அப் குழு ஏற்படுத்துவது, ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அனைவரும் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 51 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தது மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story