சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு சந்தேகங்களை தீர்க்க உதவி மையம்


சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு சந்தேகங்களை தீர்க்க உதவி மையம்
x

வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு சந்தேகங்களை தீர்க்க உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

வேலூர்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் 621 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான தேர்வு வருகிற ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது.

இந்த தேர்விற்கு வருகிற 30-ந் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பலர் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்விற்கு இணையதளம் மூலம் விண்ணப்பம் பூர்த்தி செய்வது தொடர்பான சந்தேகங்களை தீர்க்கவும், விண்ணப்பதாரர்களுக்கு உதவி செய்யவும் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த மையம் வருகிற 30-ந் தேதி வரை காலை 9.30 முதல் மாலை 6 மணி வரை இயங்கும். அந்த சமயத்தில் காவலர் ஒருவர் பணியில் இருப்பார்.

அவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான தகுதி, இணையதளத்தில் விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களை கேட்டறியலாம்.

இங்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்படாது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story