அரசு பள்ளியை பெற்றோர்கள் திடீர் முற்றுகை


அரசு பள்ளியை பெற்றோர்கள் திடீர் முற்றுகை
x

மயிலம் அருகே வகுப்பறையில் தலைமை ஆசிரியர் போதை பொருட்கள் பயன்படுத்துவதாக எழுந்த புகாரின் பேரில் பெற்றோர்கள் அரசு பள்ளியை திடீரென முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

விழுப்புரம்

மயிலம்

வகுப்பறையில்...

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே வெளியனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 62 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக குப்புவேல்முருகன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளி வகுப்பறையில் சிகரெட்பிடிப்பது, போதை பொருட்கள் பயன்படுத்துவது மற்றும் மாணவ-மாணவிகளை கிண்டல் செய்வது, திட்டுவது உள்ளிட்ட தறவான செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளதாகவும், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராமல் காலம் கடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

திடீர் முற்றுகை

இது பற்றி மாணவா்கள் தங்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மாணவ-மாணவிகளுடன் பள்ளியை திடீரென முற்றுகையிட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து வட்டார கல்வி அலுவலர் கோவர்த்தனன், மயிலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story