பள்ளி மாணவி தற்கொலை

எருமப்பட்டி அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி ஊராட்சி மேற்கு விதியை சேர்ந்தவர் முத்துசாமி மகள் அபிநயா (வயது 17) இவர் சேலம் தீவட்டிப்பட்டி அருகே நடுப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரது தாய் காந்திமதி (37) அபிநயாவை அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் வீட்டில் இருந்த அபிநயா மீண்டும் வயிற்று வலியால் துடித்த அவா் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து சாப்பிட்டதாக தெரிகிறது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த காந்திமதி 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். 2 நாள் சிகிச்சைக்கு பிறகு வீட்டில் இருந்த அபிநயாவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதாக அம்மாவிடம் கூறி இருக்கிறார். இதையடுத்து காந்திமதி அவரை நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.