மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

கம்பைநல்லூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கம்பைநல்லூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
காதலுக்கு எதிர்ப்பு
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே உள்ள ஆல்ரப்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மேகன் (வயது 22). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் மேகனின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க வேண்டும் என கூறி பெற்றோரிடம் பணம் வாங்கி கொண்டு சென்ற மேகன் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குடும்பத்தினர் விரைந்து சென்று மேகனை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்துகம்பைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வாலிபர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.