தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x

கிருஷ்ணகிரியில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி, பழையபேட்டை காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் பைத்துல்லா (வயது 29). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால், நேற்று முன்தினம் அவரது மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. இதில், மனமுடைந்த பைத்துல்லா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story