பாலக்கோடு அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

பாலக்கோடு:
பாலக்கோட்டை அடுத்த மகேந்திரமங்கலம் அருகே உள்ள போடரஅள்ளியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருக்கு பொன்னியம்மாள் என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். ஆனந்தனுக்கு கடந்த சில மாதங்களாக தலைவலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார். ஆனால் தலைவலி குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி இரவு ஆனந்தன் தன மனைவி பொன்னியம்மாளிடம் தலை வலியை தாங்க முடியாமல் தான் விஷம் குடித்ததாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆனந்தனை பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கிருந்து அவர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் ஆனந்தன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.