வாலிபர் தற்கொலை


வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் தம்பிபட்டி வசந்தம் நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் லோகேஸ்வரன் (வயது 23). இவர் பச்சை குத்தும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவருக்கும், பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் தனது ஏ.டி.எம். கார்டு, பின் நம்பர் எல்லாவற்றையும் தனது வீட்டில் தெரிவித்துவிட்டு வெளியே சென்றார். இதற்கிைடயே வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு லோகேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story