பேத்திக்கு மொட்டை போடும் நிகழ்ச்சிக்கு அழைக்காததால்- விஷம் குடித்து விவசாயி தற்கொலை

பேத்திக்கு மொட்டை போடும் நிகழ்ச்சிக்கு அழைக்காததால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
திருப்புவனம்
திருப்புவனம் அருகே உள்ள கணக்கன்குடி கிராமத்தை சேர்ந்தவர் மலையான் (வயது 62). விவசாயி. இவரது மூத்த மகன் பரமேஸ்வரன் தனது மகளுக்கு குலதெய்வ கோவிலில் மொட்டை போட்டு கிடா வெட்டியுள்ளார். இந்த விழாவிற்கு தந்தை மலையானை அழைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவிரக்தியில் இருந்த மலையான் விஷம் குடித்து வீட்டில் வாந்தி எடுத்துள்ளார்..
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரது இளைய மகன் பாஸ்கரனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மலையானை மீட்டு திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் ேமல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது இளைய மகன் பாஸ்கரன் ெகாடுத்த புகாரின்பேரில் பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.