வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
அரக்கோணம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ராணிப்பேட்டை
அரக்கோணம்
ராணப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த மாறன்கண்டிகை பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 28). இவருக்கு, திருமணமாகி மனைவி சங்கீதா, 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளனர். திருமூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்ததால், தினமும் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அதில் மனமுடைந்த திருமூர்த்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசுக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரின் பிணத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story