கோடைகால தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழா


கோடைகால தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழா
x

கோடைகால தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழாவில் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. சான்றிதழ் வழங்கினார்.

வேலூர்

குடியாத்தம்

குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் அரிமா மார்ஷல் ஆர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் ஒரு மாதம் கோடை கால தற்காப்பு கலை பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கராத்தே, ஜூடோ, சிலம்பம், யோகா உள்ளிட்ட தற்காப்பு கலைகள் பயிற்றுவிக்கப்பட்டது. பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி கலையரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஜூடோ சங்க செயலாளர் சி.ஜே.சக்திவேல், நகரமன்ற உறுப்பினர் சி.என்.பாபு, யோகா பயிற்சியாளர்கள் விவேகானந்தன், மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை பயிற்சியாளர் கராத்தே யுவராஜ் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.

முன்னதாக மாணவர்களின் தற்காப்பு கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சிலம்பு மாஸ்டர் ஜம்புலிங்கம், கராத்தே உதவி பயிற்சியாளர்கள் ஆர்.ராஜேஷ் ஸ்ரீஹரி, ஏ.ருத்ரா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story