Normal
கோடை கால விளையாட்டு முகாம்

கோடை கால விளையாட்டு முகாம் நடைபெற்றது.
அரியலூர்
செந்துறை
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள மணப்பத்தூர் ஊராட்சியில் கோடைகால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. அதன் நிறைவு விழா சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவின் சிறப்பு அழைப்பாளராக அரியலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டு 100 மாணவ-மாணவிகளுக்கு சீருடை வழங்கி வாழ்த்திப்பேசினார். முன்னதாக தலைமையாசிரியர் வீரமணி வரவேற்றார். முடிவில் அரியலூர் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் வில்லாளன் நன்றி கூறினார். இவ்விழாவில் உடற்கல்வி ஆசிரியர்கள், ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story