கோடை கால கைப்பந்து பயிற்சி முகாம்


கோடை கால கைப்பந்து பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 7 May 2023 4:00 AM IST (Updated: 7 May 2023 4:00 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் கோடை கால கைப்பந்து பயிற்சி முகாம் நடந்தது.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் கைப்பந்து கழகம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கோடை கால கைப்பந்து விளையாட்டு பயிற்சி முகாம் கடந்த 1-ந் தேதி முதல் கூடலூரில் தொடங்கியது. தொடர்ந்து 15 நாட்கள் நடக்கிறது. இதில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 46 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் கூடலூர் மார்த்தோமா நகர் மைதானத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள் பாபின், சந்தோஷ், சுரேஷ், ஜம்புலிங்கம் உள்பட கைப்பந்து கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


Next Story