டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும்


டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும்
x
தினத்தந்தி 27 May 2023 12:15 AM IST (Updated: 27 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேவர்கண்டநல்லூர் ஊராட்சியில் டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என கலெக்டரிடம், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

திருவாரூரை அடுத்த தேவர்கண்ட நல்லூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருவாரூர் மாவட்டம் தேவர்கண்ட நல்லூர் ஊராட்சியில் கீழத்தெரு பகுதியில் டாஸ்மாக் கடை புதிதாக திறக்க முயற்சி நடந்து வருகிறது. ஆனால் அந்த இடம் பிரதான சாலைக்கு அருகில் உள்ளதால் பள்ளி, மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அந்த வழியாக அதிகம் வந்து செல்வார்கள். மேலும் அந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் ரெயில்வே கேட் உள்ளது. எனவே தேவர்கண்டநல்லூர் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story