ஞாயிற்றுக்கிழமை இயங்கிய வரி வசூல் மையம்


ஞாயிற்றுக்கிழமை இயங்கிய வரி வசூல் மையம்
x

வேலூர் மாநகராட்சியில் ஞாயிற்றுக்கிழமையும் வரி வசூல் மையம் இயங்கியது.

வேலூர்

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 1,500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் பொதுஏலம் விடப்பட்டு மாதந்தோறும் வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. அதைத்தவிர குடிநீர், சொத்துவரி, பாதாளசாக்கடை இணைப்பு வரி, தொழில்வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் மாநகராட்சி சார்பில் வசூல் செய்யப்படுகிறது. மாநகராட்சியை பொறுத்தவரை வரவு, செலவு கணக்குள் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் மற்றும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை 2 முறை கணக்கிடப்படும்.

வருகிற மார்ச் மாதத்துக்குள் கடை வாடகை பாக்கி, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் எவ்வித நிலுவையும் இன்றி வசூலிக்கும்படி மாநகராட்சி ஊழியர்களுக்கு கமிஷனர் அசோக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.

அதன்பேரில் இந்த மாதம் முதல் வருவாய் ஆய்வாளர்கள், பில் கலெக்டர்கள் வாடகை பாக்கி, வரிவசூலிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story