குழந்தைகள் தினவிழாவையொட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு விருந்து பரிமாறிய ஆசிரியர்கள்

குழந்தைகள் தினவிழாவையொட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு விருந்து பரிமாறிய ஆசிரியர்கள்
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் குணசுந்தரி வரவேற்று பேசினார். தமிழ் பட்டதாரி ஆசிரியர் சண்முகராஜன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விநாயகமூர்த்தி சிறப்புரையாற்றினார். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் சுந்தரம் நன்றி கூறினார். இதனை அடுத்து பள்ளியில் படிக்கும் 700-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளி ஆசிரியர்கள் சார்பில் உணவு விருந்து அளிக்கப்பட்டது. 3 கூட்டு, அப்பளம், முட்டையுடன், சாம்பார் சாதத்தை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பரிமாறி குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார்.