வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

கோத்தகிரி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே கேர்பெட்டா பாறைமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சீனிவாஸ் (வயது 22), தொழிலாளி. இந்தநிலையில் நேற்று முன்தினம் சீனிவாஸ் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு, இரவு 9.30 மணிக்கு வீட்டிற்கு வந்து அறைக்குள் சென்றார். அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு சீனிவாஸ் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சீனிவாசை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சீனிவாஸ் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.