முத்து முனீஸ்வரர் கோவில் திருப்பணிகள் தொடக்க விழா

முத்து முனீஸ்வரர் கோவில் திருப்பணிகள் தொடக்க விழா நடந்தது.
தஞ்சாவூர்
அய்யம்பேட்டை:-
அய்யம்பேட்டை அருகே சூலமங்கலம் கிராமத்தில் முத்து முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் மீண்டும் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்திட விழா குழுவினரால் தீர்மானிக்கப்பட்டு திருப்பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் விமான பாலஸ்தாபனம், தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் சூலமங்கலம், அய்யம்பேட்டை, செருமாக்காநல்லூர், அரியமங்கை கிராம மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story