ரூ.8 லட்சம் உண்டியல் காணிக்கை

வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக ரூ.8 லட்சம் மற்றும் 30 கிராம் தங்கத்தை செலுத்தி உள்ளனர்.
வலங்கைமான்;
வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக ரூ.8 லட்சம் மற்றும் 30 கிராம் தங்கத்தை செலுத்தி உள்ளனர்.
மகா மாரியம்மன் கோவில்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பிரசித்தி பெற்ற பாடை கட்டி மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் பாடைக்காவடி திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்்கம். மேலும் சாதாரண நாட்களிலும் பக்தர்கள் கோவிலுக்்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
ரூ.8 லட்சத்து 41 ஆயிரம்
வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் நேற்று நிரந்தர உண்டியல்கள் எண்ணும் பணி நடைபெற்றது. திருவாரூர் உதவி ஆணையர் மணவழகன் தலைமையில் கோவில் செயல் அலுவலர் ரமேஷ் ஆய்வாளர் ரமணி ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் மற்றும் அய்யப்ப சேவா சங்கத்தினர் கலந்துகொண்டு உண்டியல் பணத்தை எண்ணினர். இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.8 லட்சத்து 41 ஆயிரத்து 15, மற்றும் 30 கிராம் தங்கம், 45 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.