மேலூர் அருகே ஆண்டி பாலகர் கோவிலில் தைப்பூச விழா - திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்


மேலூர் அருகே  ஆண்டி பாலகர் கோவிலில் தைப்பூச விழா - திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
x

மேலூர் அருகே ஆண்டி பாலகர் கோவிலில் ைதப்பூச விழாவையொட்டி திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மதுரை

மேலூர்,

மேலூர் அருகே ஆண்டி பாலகர் கோவிலில் ைதப்பூச விழாவையொட்டி திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தைப்பூச விழா

மேலூர் அருகே சிவகங்கை மாவட்ட எல்கையை ஒட்டிய செம்மணிப்பட்டியில் பழமையான ஆண்டிபாலகர் என்னும் முருகன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற தைப்பூச விழாவில் செம்மணிப்பட்டி, முத்துசாமிபட்டி, கரையிப்பட்டி, சுமதிபுரம், கோழிகுண்டுபட்டி, கீழவளவு, இ.மலம்பட்டி உள்ளிட்ட மேலூர் தாலுகாவிலும், சிவகங்கை மாவட்ட பகுதியில் எஸ்.எஸ்.கோட்டை, சிங்கம்புணரி, எருமைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கதர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். பாரம்பரிய கிராம வழக்கப்படி பூசாரிகள், சாமியாடிகள், அம்பலகாரர்கள் மற்றும் விரதம் இருந்த பக்தர்கள் மாலை மரியாதைகளுடன் கச்சைகட்டி என்னும் உடை அணிந்து, வண்ண குடை பிடித்து செம்மணிப்பட்டியில் இருந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

தீ மிதித்து ேநர்த்திக்கடன்

அங்கு கோவிலின் முன்பு பூக்குழி என்னும் தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பிள்ளை வரம் வேண்டிய ஏராளமான பெண்கள் குடும்பத்தினருடன் கரும்பு கட்டில் தொட்டில் கட்டி கோவிலை சுற்றி வந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

உரங்கான்பட்டி அருகிலுள்ள புலிப்பட்டி முருகன் கோவிலில் பக்தர்கள் காய்கறிகள் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வணங்கினர். விழாவில் அன்னதானம் நடைபெற்றது. அதே போல் நாவினிப்பட்டி மூக்கனாண்டிமலை முருகன் கோவில் தைப்பூச விழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். அ.வல்லாளபட்டி முருகன் கோவில், இடையபட்டி முருகன் கோவில், வெள்ளிமலைப்பட்டி உள்பட மேலூர் பகுதியில் பல்வேறு இடங்களில் தைப்பூச விழாக்கள் சிறப்பாக நடைபெற்றன.


Next Story