60 அடி ஆழ கிணற்றில் பாய்ந்த கார் 3 பேர் கண்ணாடிகளை உடைத்து வெளியேறி தப்பினர்

60 அடி ஆழ கிணற்றில் பாய்ந்த கார் 3 பேர் கண்ணாடிகளை உடைத்து வெளியேறி தப்பினர்
ஜோலார்பேட்டை,
நாட்டறம்பள்ளி அருகே 60 அடி ஆழ கிணற்றில் கார் பாய்ந்தது. காரில் இருந்த 3 பேர் கண்ணாடிகளை உடைத்து வெளியேறி தப்பினர்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கூத்தாண்டகுப்பம் கரியன் வட்டம் பகுதியைச் சேர்ந்த ரகுநாதன் இவரது நந்தகுமார் (வயது 27), சம்பத் மகன் ராமச்சந்திரன் (28), கோவிந்தசாமி மகன் சுந்தர் 41). இவர்கள் 3 பேரும் பெங்களூரு பகுதியில் வேலை செய்து வருகின்றனர்.இவர்களது உறவினர் நேற்று முன்தினம் இறந்துவிட்டதால் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக விடுமுறையில் நேற்று காலை பெங்களூரு சொந்த ஊருக்கு காரில் வந்து பங்கேற்றுவிட்டு பெங்களூர் நோக்கி புறப்பட்டனர்.
காரை நந்தகுமார் ஓட்டிச் சென்றார். புறப்பட்ட சிறிது நேரத்தில் கூத்தாண்டகுப்பம் கிராம பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் விழுந்தது. அந்த கிணற்றில் 55 அடி தண்ணீர் இருந்ததால் காரில் இருந்த 3 பேரும் கார் கண்ணாடிகளை உடைத்து கொண்டு வெளியே நீச்சல் அடித்து எந்த வித காயமின்றி உயிர் தப்பி கிணற்றில் இருந்து வெளியே வந்தனர்.
தகவல் அறிந்த கூத்தாண்டகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் (பொறுப்பு) கலைமணி தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரை மீட்கும் முயற்சியில் ஈடுபமட்டனர்.
கார் தண்ணீருக்கு அடியில் சென்று விட்டதால் காரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனையளடுத்து கிரேன் வரவழைக்கப்பட்டு சுமார் 4 மணி நேரம் போராடி கிணற்றில் கவிழ்ந்த காரை கிரேன் மூலம் தூக்கி வெளியே கொண்டு வந்தனர்.