சேதமடைந்த தடுப்பு பாலத்தை சீரமைக்க வேண்டும்


சேதமடைந்த தடுப்பு பாலத்தை சீரமைக்க வேண்டும்
x

சேதுபாவாசத்திரம் அருகே சேதமடைந்த தடுப்பு பாலத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்:

சேதுபாவாசத்திரம் அருகே சேதமடைந்த தடுப்பு பாலத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடுப்பு பாலம்

சேதுபாவாசத்திரம் கடைமடையில் பூக்கொல்லை, கழனிக்கோட்டை, முடச்சிக்காடு, வீரியங்கோட்டை, உடையநாடு வழியாக மரக்காவலசை வரை 5-ம் நம்பர் பாசன வாய்க்கால் செல்கிறது.இந்த வாய்க்காலில் பல்வேறு இடங்களில் பாசன வசதிக்கு ஏற்ப மதகுகள் அமைத்து ஊற்று பாலம் என கூறப்படும் தடுப்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

பாசன வசதி

உடையநாடு, மரக்காவலசை இடையே உள்ள தேக்கு பாலம் இடிந்து ஒரு ஆண்டுக்கு மேலாகிறது. பாலம் அருகே இரண்டு மதகுகள் உள்ளது. ஒரு மதகு வழியாக தச்சமா குளத்திற்கு தண்ணீர் நிரம்பி 150 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

மற்றொரு மதகு வழியாக நேரடியாக 150 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.இந்த மதகு அருகிலுள்ள தடுப்பு பாலம் (ஊற்று பாலம்) இடிந்து சேதமடைந்துள்ளதால் தண்ணீர் தேங்கி மதகு வழியாக செல்லாமல் நேரடியாக மரக்காவலசை சென்றுவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மதகு வழியாக 300 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

சீரமைக்க வேண்டும்

இதுகுறித்து கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பொதுப்பணிதுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடும், இதுவரை பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் .தடுப்பு பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story