பிரபல மஞ்சுவிரட்டு காளை "ஜான் சீனா"உயிரிழப்பு: கண்ணீர் விட்டு அழும் ஊர் மக்கள்..


பிரபல மஞ்சுவிரட்டு காளை ஜான் சீனாஉயிரிழப்பு: கண்ணீர் விட்டு அழும் ஊர் மக்கள்..
x

குடியாத்தம் அருகே பிரபல மஞ்சுவிரட்டு காளை "ஜான் சீனா" உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.

லூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பிரபல மஞ்சுவிரட்டு காளை "ஜான் சீனா" உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வீரிசெட்டிபல்லி பகுதியைச் சேர்ந்தவர் ரவி மற்றும் கோபி. இவர்களுக்கு சொந்தமான காளையின் பெயர் ஜான் சீனா.

பல்வேறு பதக்கங்களை வென்ற இந்த காளை , உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. ஜான் சீனாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த இளைஞர்கள், கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மேலும் மேளதாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து ஜான் சீனாவுக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது .


Next Story