அடையாள அட்டை வழங்குவதற்கான முகாமுக்கு தவழ்ந்தே வந்த மாற்று திறனாளிகள்


அடையாள அட்டை வழங்குவதற்கான முகாமுக்கு தவழ்ந்தே வந்த மாற்று திறனாளிகள்
x

சக்கர நாற்காலி வசதி செய்யப்படாததால் அடையாள அட்டை வழங்கும் முகாமுக்கு மாற்றுத்திறனாளிகள் தவழ்ந்தே வரும் நிலை ஏற்பட்டது.

திருவண்ணாமலை

செய்யாறு

சக்கர நாற்காலி வசதி செய்யப்படாததால் அடையாள அட்டை வழங்கும் முகாமுக்கு மாற்றுத்திறனாளிகள் தவழ்ந்தே வரும் நிலை ஏற்பட்டது.

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறன் கொண்ட பயனாளிகளை பரிசோதனை மூலம் தேர்வு செய்து நலத்திட்ட உதவிகள் வழங்கிட அடையாள அட்டை வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அரசு ஆண்கள் பள்ளி வாயிலில் இருந்து முகாம் நடத்தும் இடத்திற்கு மாற்றுத்திறனாளிகளை அழைத்துவர தேவையான சக்கர நாற்காலி வசதி செய்யப்படாததோடு போதுமான பணியாட்களும் நியமிக்கப்படவில்லை.

இதனால் உடன் வந்தவர்களே அவர்களை தூக்கிக் கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு சில மாற்றுத்திறனாளிகள் நடக்க முடியாமல் முகாம் பகுதிக்கு தரையில் தவழ்ந்தே சிரமத்துடன் வந்தனர். அவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.

குறைந்த பணியாளர்களே இருந்ததால் கனியோடு நடந்து கொள்ளாமல் மாற்றுத்திறனாளிகளை கடுமையான வார்த்தைகளால் திட்டியதால் பலர் வேதனை அடைந்தனர்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் போதுமான முன்னேற்பாடுகள் செய்யவில்லை என மாற்றுத்திறனாளிகள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் முகாமினை ஆய்வு செய்த செய்யாறு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஒ.ஜோதி மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வசதிகள் செய்து அவர்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.


Next Story