தெருவை மறித்து வைத்துள்ள கதவை அகற்ற வேண்டும்


தெருவை மறித்து வைத்துள்ள கதவை அகற்ற வேண்டும்
x

தெருவை மறித்து வைத்துள்ள கதவை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை


வாலாஜாபேட்டை-சோளிங்கர் ரோடு துணை அஞ்சலகம் பின்பக்கம் நார்வா சந்து தெரு உள்ளது. மறைவான சந்து தெரு என்பதால் பொதுமக்கள் அவசரத்துக்கு அங்கு இயற்கை உபாதையை கழிக்க செல்வர். இந்தநிலையில் வாலாஜா நகராட்சியில் அடங்கும் இந்தத் தெருவை மக்கள் பயன்படுத்த தடை செய்து, சட்டத்துக்கு புறம்பாக தெருவை மறித்து கதவுகளை அமைத்து பூட்டுப் போட்டு உள்ளனர். ஒரு வருடமாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நகராட்சி அதிகாரிகள் உடனடியாக கதவுகளை அகற்ற வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story