சிறுமி பாலியல் பலாத்காரம்


சிறுமி பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த வெள்ளையன் மகன் தமிழ்ச்செல்வன்(23) என்பவர் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக படுத்திருந்த சிறுமியை தமிழ்ச்செல்வன் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.


Next Story