காங்கயம் அருகே சாலையோரம் உள்ள மைல்கல்லை மூடியுள்ள புற்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காங்கயம் அருகே சாலையோரம் உள்ள மைல்கல்லை மூடியுள்ள புற்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காங்கயம்
காங்கயம் அருகே சாலையோரம் உள்ள மைல்கல்லை மூடியுள்ள புற்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அண்மையில் மழை பெய்தது. இதன் காரணமாக ஏரி, குளங்கள், குட்டைகள், கிணறுகள், மேய்ச்சல் நிலங்கள், சாலையோர பகுதிகளில் ஆகிய இடங்களில் மேய்ச்சல் புற்கள் செழித்து வளர்ந்துள்ளது. இந்த நிலையில் காங்கயம் - தாராபுரம் சாலை, சக்தி நகர் பகுதி அருகே சாலையோரத்தில் உள்ள மைல் கல்லை சுற்றி புற்கள் செழித்து வளர்ந்து தற்போது இந்த மைல் கல்லே தெரியாத அளவிற்கு வளர்ந்துள்ளது.
இதன் காரணமாக மைல் கல்லில் உள்ள எண்கள் மற்றும் எழுத்துக்கள் தெரியாத அளவிற்கு புற்கள் மூடி காணப்படுகிறது. இதனால் இந்த பிரதான சாலை வழியாக செல்லும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் குழப்பம் அடையும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. மேலும் இதேபோல் காங்கயம் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் உள்ள மைல் கல்லை சுற்றி புற்கள் சூழ்ந்தும், மைல்கல் மண்ணில் புதைந்தும் காணப்படுகிறது.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நெடுஞ்சாலை பணியாளர்களை கொண்டு இதுபோல் காங்கயம் பகுதிகளில் பல்வேறு இடங்களில் காணப்படும் மைல் கல்லை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.