மனமகிழ் மன்ற கட்டிடத்தை பூட்டி கையகப்படுத்திய வருவாய்த்துறை


மனமகிழ் மன்ற கட்டிடத்தை பூட்டி கையகப்படுத்திய வருவாய்த்துறை
x

மனமகிழ் மன்ற கட்டிடத்தை பூட்டி வருவாய்த்துறையினர் கையகப்படுத்தினர்.

திருச்சி

மனமகிழ் மன்றம்

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே வ.உ.சி. சாThe Revenue Department has locked up and taken possession of the Manajoy Council buildingலை ராஜாகாலனியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் குத்தகை அடிப்படையில் 'ஆபீசர்ஸ் கிளப்' என்ற பெயரில் மனமகிழ் மன்றம் ஒன்று செயல்பட்டு வந்தது. கடந்த 1964-ம் ஆண்டு அப்போதைய மாவட்ட கலெக்டராக இருந்த சொக்கலிங்கம் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1965-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் பக்தவச்சலம் இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார்.

27,971 சதுர அடி பரப்பளவு கொண்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடத்தில் இயங்கி வந்த மனமகிழ் மன்றத்தில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் திருச்சியின் முக்கிய பிரபலங்கள் உறுப்பினர்களாக இருந்தனர். இங்கு டென்னிஸ் விளையாடுவதற்கான ஒரு மைதானம் உள்ளது. மேலும் மனமகிழ் மன்ற கட்டிடத்திற்குள் பில்லியட்ஸ் உள்ளிட்ட விளையாட்டுகளும் நடந்ததாக கூறப்படுகிறது.

வாடகை பாக்கி

வருவாய்த்துறைக்கு சொந்தமான இந்த கட்டிடத்துக்கு கடந்த 1997-ம் ஆண்டு முதல் மனமகிழ் மன்ற நிர்வாகிகள் உரிய வாடகையை வருவாய்த்துறைக்கு செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. வாடகை பாக்கி பல கோடி ரூபாயை தொட்ட நிலையில் பலமுறை அறிவுறுத்தப்பட்டது. ஆனால் வாடகையை அவர்கள் கொடுக்காததால் மாவட்ட கலெக்டர் இந்த மனமகிழ் மன்றத்திற்கான குத்தகையை ரத்து செய்தார்.

இது தொடர்பாக கிளப் நிர்வாகிகள் சென்னை ஐமனமகிழ் மன்ற கட்டிடத்தை பூட்டி கையகப்படுத்திய வருவாய்த்துறைகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு உடனடியாக இடத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உத்தரவிட்டது.

கையகப்படுத்தினர்

அதன்படி நேற்று திருச்சி மேற்கு தாசில்தார் ஷேக்முஜிப் தலைமையிலான வருவாய்த்துறையினர் மனமகிழ் மன்றத்துக்கு சென்றனர். அங்கு அனைத்து கதவுகளையும் பூட்டி, அந்த கட்டிடத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் அங்குள்ள விளையாட்டு மைதானம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.


Next Story