சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது


சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நாளை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே கும்பகோணம் சாலை மற்றும் கல்லணை சாலையை இணைக்கும் வகையில் மூவலூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட உயர்மட்ட பாலப் பணியினை உடனே முடிக்க வேண்டும். சோழம்பேட்டை ஊராட்சியில் உள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (வெள்ளிக்கிழமை) சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நேற்று மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் மகேந்திரன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் மேகநாதன், ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுபாசுந்தரி, சோளம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவி செந்தமிழ்ச்செல்வி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் போலீசார் கலந்து கொண்டனர்.அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்தனர். இதை தொடர்ந்து நாளை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்தனர்.


Next Story