கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்


கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
x

கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

சேலம்

கன்னங்குறிச்சி:

சேலம் சின்னத்திருப்பதி அபிராமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் தேவதர்சினி (வயது 20). தனியார் கல்லூரியில் பி.ஏ. வரலாறு 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், அதே பகுதிைய சேர்ந்த குணசீலன் (21) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு 2 பேரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். போலீசார் 2 பேரின் பெற்றோரையும் அழைத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


Next Story