செயல்பாட்டுக்கு வராத சிக்னல்

செயல்பாட்டுக்கு வராத சிக்னல்
அருள்புரம்
திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் இரு சக்கர, 4 சக்கர வாகனங்கள் என தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் இந்த சாலை எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்து பரபரப்பாக காணப்படும். அதில் டி.கே.டி.மில் நான்கு சாலை சந்திக்கும் இடத்தில் கணபதிபாளையத்திலிருந்து தினந்தோறும் அதிகப்படியான வாகனங்கள் வருவதாலும் போக்குவரத்து சிக்னல் இல்லாத காரணத்தாலும் தினந்தோறும் வாகன நெரிசலும், அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.
இந்த போக்குவரத்து நெரிசலை சீரமைக்க டி.கே.டி.மில் நான்கு சாலை சந்திப்பில் சிக்னல் நிறுவப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. ஆனால் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதனால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்பட்டுவருகின்றன. எனவே சிக்னலை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், சமூக அலுவலரும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.