'டெஸ்ட் பர்ச்சேஸ்' முறையை கைவிட வேண்டும்

‘டெஸ்ட் பர்ச்சேஸ்’ முறையை கைவிட வேண்டும் என வணிகர்சங்க பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி, வணிகவரித்துறையின் டெஸ்ட் பர்ச்சேஸ் போன்றவற்றால் சிறிய வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனை கைவிடக்கோரி தமிழகம் முழுவதும் வருகிற 24-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து வணிகர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஜி.எஸ்.டி. சட்ட விதிகளை எளிமையாக்கி, டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை உடனடியாக கைவிடக்கோரியும் ஆம்பூரில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. வேலூர் மண்டல தலைவர் சி.கிருஷ்ணன் தலைமை தாங்கி வியாபாரிகளிடம் துண்டுபிரசுரம் வழங்கினார். மாவட்ட தலைவர் சுபாஷ், மாநில துணை தலைவர் ஆர்.ஞானசேகர் மற்றும் வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story