கஞ்சா விற்ற வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

வேலூரில் கஞ்சா விற்ற வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வேலூர்
வேலூர் சைதாப்பேட்டை கன்னிகோவில் தெருவை சேர்ந்த கணேசன் மகன் பிரசாந்த் என்ற மணி (வயது 21). இவர் கஞ்சா விற்றபோது வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
மணி மீது வேலூர் வடக்கு உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து அவர் குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மணியை குண்டர் சட்டத்தில் அடைக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.
இதையடுத்து அதற்கான ஆணையின் நகலை ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் அவரிடம் போலீசார் வழங்கினர்.
Related Tags :
Next Story