கீழ்பவானி வாய்க்காலில் 15-ந் தேதி தண்ணீர் திறக்கவேண்டும்ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

கீழ்பவானி வாய்க்காலில் 15-ந் தேதி தண்ணீர் திறக்கவேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்
ஈரோடு
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நீர்வளத்துறை சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு கண்காணிப்பு பொறியாளர் மன்மதன் தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் திருமூர்த்தி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, 'கீழ்பவானி வாய்க்காலில் வருகிற 15-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும். பாசன பகுதிகள் முழுவதும் வறட்சி நிலவுவதால் கரும்பு, வாழை, தென்னை போன்ற பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டிருப்பதால் முறை வைக்காமல் தண்ணீர் விட வேண்டும். மேலும் கீழ்பவானி வாய்க்காலில் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தனர
Related Tags :
Next Story