சங்கரன்கோவில் அருகே திருமண கோஷ்டியினர் வந்த வேன் கவிழ்ந்தது; 40 பேர் காயம்


சங்கரன்கோவில் அருகே  திருமண கோஷ்டியினர் வந்த  வேன் கவிழ்ந்தது; 40 பேர் காயம்
x

சங்கரன்கோவில் அருகே, திருமண கோஷ்டியினர் வந்த வேன் டயர் வெடித்து கவிழ்ந்ததில் 40 பேர் காயம் அடைந்தனர்

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே, திருமண கோஷ்டியினர் வந்த வேன் டயர் வெடித்து கவிழ்ந்ததில் 40 பேர் காயம் அடைந்தனர்.

திருமண கோஷ்டி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சோலைச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகளுக்கும், பாறைபட்டியைச் சேர்ந்த ஒருவருக்கும் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று திருமணம் நடந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக கண்ணனின் உறவினர்கள் சோலைச்சேரியில் இருந்து சங்கரன்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர். பருவக்குடி விலக்கு அருகே வந்தபோது வேனின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் வேன் கவிழ்ந்தது.

40 பேர் காயம்

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த சோலைச்சேரியைச் சேர்ந்த பிரேமா, கண்ணன், பத்ரகாளி, ஆனந்த்பிரபு, பேச்சியம்மாள், ராமு, ஆனந்த் பிரபு, அருண்குமார், செல்லம்மாள், பாக்கியலட்சுமி, மின்னல் கொடி, அருள் முருகன், பிரதீப் உள்பட 40 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் சிலர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தனுஷ்குமார் எம்.பி., ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், சங்கரன்கோவில் நகரசபை தலைவி உமா மகேஸ்வரி சரவணன் மற்றும் நிர்வாகிகள் காயம் அடைந்தவர்களை சந்தித்து நேரில் ஆறுதல் கூறினார்கள்.


Next Story