கூடலூரில் ஒட்டாண்குளத்தை தூர்வாரும் பணி தொடக்கம்; விவசாயிகள் மகிழ்ச்சி


கூடலூரில் ஒட்டாண்குளத்தை தூர்வாரும் பணி தொடக்கம்; விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 28 May 2023 2:30 AM IST (Updated: 28 May 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் ஒட்டாண்குளத்தை தூர்வாரும் பணி தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தேனி

கூடலூரில் மைத்தலை மன்னடியான்குளம் என்று அழைக்கப்படும் ஒட்டாண்குளம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள சுரங்கனாறு நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் மழைநீர் மற்றும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வைரவன் வாய்க்கால் வழியாக வரும் தண்ணீர் ஒட்டாண்குளத்திற்கு வருகிறது. இந்த குளத்தின் பாசனத்தை நம்பி சுமார் 500 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. மேலும் கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ஒட்டாண்குளத்தை சிலர் ஆக்கிரமித்ததால் அதன் பரப்பளவு குறைந்து வந்தது. இதனால் பாசனத்திற்காக குளத்தில் போதிய அளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை இருந்தது. இதையடுத்து ஒட்டாண்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை தூர்வார வேண்டும் என்று கூடலூர் பகுதி விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒட்டாண்குளம் தலை மதகு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.

ஆனால் அந்த பணிகள் முழுமையாக நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இதற்கிடையே மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவின்பேரில், ஒட்டாண்குளத்தை தூர்வாரும் பணி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்களது நில சான்றுகளை கொடுத்து குளத்தில் இருந்து இலவசமாக வண்டல் மண்ணை டிராக்டர் மூலம் அள்ளி செல்கின்றனர். இதனால் ஒட்டாண்குளம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.


Next Story