மூதாட்டியை ஏமாற்றி நகையை பறித்த வாலிபர்


மூதாட்டியை ஏமாற்றி நகையை பறித்த வாலிபர்
x
தினத்தந்தி 20 May 2023 2:30 AM IST (Updated: 20 May 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே மூதாட்டியை ஏமாற்றி நகையை பறித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே ஜி.நடுப்பட்டி கேத்தம்பட்டியை சேர்ந்தவர் பொன்னி (வயது 62). இவர் நேற்று நவாமரத்துப்பட்டியில் உள்ள மளிகை கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர், பொன்னியிடம் மத்திய அரசின் திட்டத்தில் உதவித்தொகை கிடைத்துள்ளது என்றும், இதற்காக தங்களது மகன் அழைத்துவர கூறியதாக தெரிவித்தார். இதனை நம்பிய பொன்னி, அந்த வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். சேனன்கோட்டை வரை சென்ற அந்த வாலிபர், அங்கு சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் மூதாட்டியிடம் அந்த வாலிபர், ஒரு அதிகாரியிடம் அழைத்து செல்ல உள்ளதாகவும், அப்போது ஏழை போன்று தெரிந்தால் தான் உதவித்தொகை கிடைக்கும் என்றும் கூறினார்.

பின்னர் பொன்னி அணிந்திருந்த தங்க தோடு, மூக்குத்தி உள்ளிட்ட 1 பவுன் நகையை கழற்றி வாங்கிக்கொண்டார். அதைத்தொடர்ந்து பொன்னியிடம், இங்கேயே நில்லுங்கள், அதிகாரியை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு அந்த வாலிபர் சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் திரும்பிவரவில்ைல். அப்போது தான் ஏமாற்றம் அடைந்ததை பொன்னி அறிந்தார். இதுகுறித்து அவர் தனது மகன் காளிமுத்துவுக்கு தகவல் தெரிவித்தார். அவர் இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story