ஓராண்டாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது


சாத்தான்குளம் அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஓராண்டாக தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஓராண்டாக தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மனைவி தற்கொலை

சாத்தான்குளம் அருகேயுள்ள வேப்பங்காடு கிராமத்தை சேர்ந்த ஞானசிகாமணி மகன் சித்திரைச்செல்வன் (36). தொழிலாளி. இவருக்கும், சாத்தான்குளம் அருகேயுள்ள கருங்கடலை சேர்ந்த லூசியா (30) என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த சில மாதங்களில் இருந்தே கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதை தொடர்ந்து லூசியா, கருங்கடலில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு கோபித்து கொண்டு சென்றுள்ளார். அங்கே அவர் வசித்து வந்தநிலையில் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

கணவர் தலைமறைவு

இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தியதில், லூசியாவை அவரது கணவர் தற்கொலைக்கு தூண்டியது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் சித்திரை செல்வன் தலைமறைவாகி விட்டார்.

கைது

இந்நிலையில் சாத்தான்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு அருள் உத்தரவின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையில் மற்றும் தனிப்படையினர் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் சத்தியமங்கலத்தில் தலைமறைவாக இருந்த சித்திரைசெல்வனை போலீசார் கைது செய்தனர். ஓராண்டுக்குப்பின் தலைமறைவாக இருந்த வாலிபரைகைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் துணை சூப்பிரண்டு பாராட்டினார்.


Next Story