ஜவுளிக்கடையில் ரூ.50 ஆயிரம் திருட்டு
வேதாரண்யத்தில் ஜவுளிக்கடையில் ரூ.50 ஆயிரம் திருட்டு போனது.
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் வடக்கு வீதியில் ஒரு ஜவுளி கடை உள்ளது. இந்த ஜவுளி கடையை சம்பவத்தன்று காலையில் திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் இன்கர்சால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கண்காணிப்பு கேமராவை திருப்பி வைத்து விட்டு கல்லாவில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் துணி மணிகளை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story