மோட்டார்சைக்கிள் ஷோரூமில் ரூ.22 ஆயிரம் திருட்டு

வந்தவாசியில் மோட்டார்சைக்கிள் ஷோரூமில் ரூ.22 ஆயிரம் திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை
வந்தவாசி
வந்தவாசியில் சேத்துப்பட்டு சாலையில் மோட்டார்சைக்கிள் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமை நேற்று இரவு ஊழியர்கள் வழக்கம்போல் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
இன்று காலை ஷோரூமை மெக்கானிக் திருநாவுக்கரசு திறந்தார். அப்போது உள்ளே இரு ஜன்னல்களின் கம்பிகள் அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தது
இதுகுறித்து திருநாவுக்கரசு அளித்த தகவலின்பேரில் ஷோரூம் மேலாளர் பரணிகுமார் வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் ஜன்னல்கள் வழியாக உள்ளே புகுந்து ரூ.22 ஆயிரம் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் பொன்னூர் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story