சேலம் வழியாக செல்லும் 2 ரெயில்கள் இயக்கத்தில் நேரம் மாற்றம்

சேலம் வழியாக செல்லும் 2 ரெயில்கள் இயக்கும் நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சூரமங்கலம்:
திருப்பூர் ரெயில் நிலையத்திற்கும், வாஞ்சிபாளையம் ரெயில் நிலையத்திற்கும் இடையே உள்ள தண்டவாள பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது, இதையொட்டி சேலம் வழியாக செல்லும் ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் மற்றும் எர்ணாகுளம்- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் இயக்கத்தில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 13352) நாளை ஆலப்புழா ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் 3 மணி நேரம் காலதாமதமாக காலை 9 மணிக்கு புறப்படும்,
இதேபோல் எர்ணாகுளம்- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12678) நாளை எர்ணாகுளத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படுவதற்கு பதில் 2.30 மணி நேரம் காலதாமதமாக காலை 11.40 மணிக்கு புறப்படும். மேற்கண்ட தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.