திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரிமுன்னாள் மாணவர்கள் சந்திப்பு


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரிமுன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே காயல்பட்டினம் பேர்ல் கார்டன் ரிசார்ட்டில் ஆதித்தனார் கல்லூரி வணிகவியல் துறையில் 1994-1997-ம் ஆண்டு பி.காம். படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி 25 ஆண்டு வெள்ளி விழாவாக நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கல்லூரி வணிகவியல் துறை முன்னாள் பேராசிரியர் ஜெயபாஸ்கரன் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள், தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை முன்னாள் மாணவர்கள் ஹம்ஸா முகைதீன், ஜான் போஸ்கோ மற்றும் ராம மூர்த்தி ஏற்பாடு செய்திருந்தனர்.


Next Story