திருச்செந்தூர்வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணித்திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது


திருச்செந்தூர்வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணித்திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
x
தினத்தந்தி 23 Aug 2023 12:15 AM IST (Updated: 23 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணித்திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த உபகோவிலான வெயிலுகந்த அம்மன் ஆவணித் திருவிழா இன்று(புதன்கிழமை) காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைமுன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனையும், அம்மன் சன்னதிக்கு எதிராக உள்ள கொடிமரத்தில் காலை 5.40 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. இத்திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்மன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெறும். 10-ம் திருநாளான செப். 1-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. இத்திருவிழாவை முன்னிட்டு சிவன் கோவிலில் இணை ஆணையர் கார்த்திக்கிடம் நிர்வாக அனுமதி பெறும் நிகழ்ச்சி நேற்று காலையில் நடந்தது. வெயிலுகந்த அம்மன் ஆவணி திருவிழாவை நடத்தி தர வேண்டும் என கோவில் பூஜகர்கள் பாரசைவ வல்லவராயர்களிடம் இணை ஆணையர் தாம்பூலம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிவன் கோவில் மணியம் நெல்லையப்பன் உட்பட கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story