நாராயண பெருமாள் கோவிலில் திருப்பணி


நாராயண பெருமாள் கோவிலில் திருப்பணி
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 11:59 AM IST)
t-max-icont-min-icon

நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் திருப்பணி அறநிலையத்துறை இணை ஆணையர் ஆய்வு செய்தனர்

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே நாங்கூரில் நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் முத்துராமன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். இந்த ஆய்வின்போது நிர்வாக அதிகாரிகள் அன்பரசன், முருகன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story